வடக்கில் இராணுவத்தினர் சிவில் நடவடிக்கையில் ஈடுபடுவது குறைக்கப்பட வேண்டும்!!

363

வவுனியா பிரதி மாகாண விவசாய அலுவலகக் கட்டிடம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (06.06) பணிப்பாளர் அ.சகிலா பானு தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சர் க.சிவனேசன் கலந்துகொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன், வடக்கில் இராணுவத்தினர் சிவில் நடவடிக்கையில் ஈடுபடுவது குறைக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மரநடுகை நிகழ்வில் வடக்கு ஆளுநரே இராணுவத்தை அழைத்திருந்தார். சிவில் நடவடிக்கையில் இராணுவத்தினரை அனுமதிப்பது சரியா? என ஊடகவியலாளர் கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

விவசாயமும் கமநலசேவைகளும், கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம், மீன்பிடி நீர்வழங்கல், மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கா.தெய்வேந்திரம் மற்றும் வடமாகாண விவசாய பணிப்பாளர் சி.சிவகுமாரின்’ பங்கேற்புடன், இக்கட்டிடமானது 34.62 மில்லியன் ரூபாவில் அமைக்கப்படவுள்ளது.

நிகழ்வில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன், மற்றும் மாகாண பிரதி விவசாய அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.