காலா ரஜினியின் அரசியல் வருகைக்கானது இல்லை : இயக்குநர் ரஞ்சித்!!

532

அரசியலுக்கு வருகிறேன் என ரஜினி அறிவித்த பின்னர் வெளியான முதல் திரைப்படம் காலா என்பதால் படம் அரசியல் ரீதியான படமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியில் நிலவியது.

ஆனால், காலா ரஜினியின் அரசியலுக்கான படம் கிடையாது என ரஞ்சித் கூறியுள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் ரஞ்சித், காலா படம் ரஜினியின் அரசியலுக்கான படம் இல்லை. அது மக்கள் பிரச்னையை எடுத்துரைக்கும் படம்.

பல தடைகளை தாண்டி வெளியான படத்துக்குப் பல நேர்மறையான கருத்துகள் வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. காலா படத்தின் 2-ம் பாகம் எடுக்கும் எண்ணம் தற்போது இல்லை.

பேஸ்புக்கில் இந்தப் படத்தை நேரடி ஒளிபரப்பு செய்த தம்பிக்கு நன்றி எனக்கூறி சிரித்துள்ளார் . நீங்கள் இயக்குநரா? அரசியல்வாதியா? என நிருபர்கள் கேட்ட கேள்விக்குச் சற்றும் யோசிக்காமல் நான் அரசியல்வாதி என பதிலளித்துள்ளார்.