கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை இன்று தற்காலிகமாக மூடப்படுகின்றது!!

451

roadபொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் செய்யும் இரு அரச தலைவர்களது போக்குவரத்து காரணமாக கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை இன்று சில மணித்தியாலங்கள் மூடப்படவுள்ளது.

இதன்படி இன்று பிற்பகல் 12.45 தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை கொழும்பு – கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையூடான மக்கள் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்படவுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதேவேளை களனி பாலத்திலிருந்து பொரளை கனத்த சந்தி வரை பேஸ்லைன் வீதி, கனத்த சந்தியிலிருந்து பம்பலப்பிட்டி வரையான பௌத்தாலோக மாவத்தை, பம்பலப்பிட்டியிலிருந்து பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையான காலி வீதியூடான மக்கள் போக்குவரத்து குறித்த நேரத்தில் தற்காலிகமாக தடை செய்யப்படவுள்ளது.