வவுனியாவில் சட்டவிரோத வலைகளுடன் மூவர் கைது!!

275

வவுனியா உளுக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் சட்டவிரோதமான வலைகளைப்பயன்படுத்தி மீன்பிடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து சட்டவிரோதமான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளும், படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக இலங்கை தேசிய நீர் உயிரிச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் அலுவலகர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று(08.06) காலை உளுக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் சட்டவிரோதமான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப்பயன்படுத்தி மீன்டிபியில் ஈடுபட்டுள்ள மூவரை மாவட்ட நீர் உயிரினச் செய்கை விரிவாக்கல் உத்தியோகத்தர் யோ.நிசாந்தன் தலைமையில் உத்தியோகத்தர்களான ச.சுதாகரன், கு.டியரூபன், செ.ரவிகரன், எஸ்.டி.எஸ்.கே.குமார ஆகியோருடன்

வவுனியா, மன்னார் சிறப்பு அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போதே சட்டவிரோத வலைகளுடன் படகுகள் சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்துள்ளதாகவும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி நான்கு இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

விஷேட அதிரடிப்படையினர் எஸ்.ஏ.எஸ். பண்டார, பி.ஜி.ஆர்.தென்னக்கோன், பிரேமலால், குருகே, ரூபசிங்க, விக்கிரமசிங்க, சானத ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நிர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.