பொலிசாரை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் பெங்களூரு பொலிசாரால் கோவை அருகே கைது செய்யப்பட்டார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பின்போது 2 துணை நடிகர்கள் அணையில் இருந்து தவறி விழுந்து இறந்தனர்.
இது தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சுந்தர் கோர்ட்டில் ஆஜராகாததால் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுந்தரை கைது செய்வதற்காக அவரது வீட்டுக்கு பொலிசார் விரைந்த நிலையில் அங்கிருந்த நடிகர் துனியா விஜய் பொலிசாரை திசைதிருப்பும் நோக்கில் அவர்களுடன் பேச்சு கொடுத்து சம்பவ இடத்தில் இருந்த சுந்தரை தப்பிக்க விட்டார். பின்னர் துனியா விஜய் அங்கிருந்து தலைமறைவானார்.
இது குறித்து பெங்களூர் பொலிசார் துனியா விஜய் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில் நேற்றிரவு கோவை அருகே அவரை கைது செய்துள்ளனர்.






