சரித்திர வேடங்களில் கலக்கும் அனுஷ்கா, வடிவேலு, வித்யாபாலன்!!

269

vadiசரித்திர வேடங்களில் நடிக்க கதாநாயகிகள் விரும்புகிறார்கள். அனுஷ்காவுக்கு ருத்ரமா தேவி படம் மூலம் இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. இதில் ராணி கரக்டரில் வருகிறார். கையில் வாளுடன் சரித்திர காலத்து ஆடை ஆபரணங்கள் அணிந்து கம்பீரமாக தோன்றும் அவரது படங்கள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. வாள் சண்டை குதிரையோற்றம் பயிற்சிகள் பெற்று இப்படத்தில் நடிக்கிறார். அரண்மனை அரங்குகள் அமைத்து இதன் படப் பிடிப்பு நடந்து வருகிறது.

இது போல் வித்யாபாலன் மகாபாரதம் என்ற அனிமேஷன் படத்தில் திரவுபதி வேடத்தில் நடிக்கிறார். புராண காலத்து உடைகளை அணிந்து இதில் நடிக்கிறார். சரித்திர புராண படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பதால் மற்ற நடிகைகளும் இது போன்ற படங்களில் நடிக்க ஆர்வப்படுகின்றனர்.

சரித்திர கதைகள் வைத்துள்ள இயக்குனர்களுக்கு வாய்ப்பு கேட்டு தூது அனுப்பவும் செய்கிறார்கள். சரித்திர கதைகளில் நடிப்பதற்கு பத்மினி, வைஜெயந்திமாலா இருவரையும் தான் தற்போதையை நடிகைகள் முன் உதாரணமாக எடுத்து கொள்கின்றனர். இவர்கள் நிறைய படங்களில் ராணி, இளவரசி வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

வஞ்சிக்கோட்டை படத்தில் இருவரும் இணைந்து கண்ணும் கண்ணும் கலந்து பாட்டுக்கு ஆடிய போட்டி நடனம் அப்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. நடிகர்களில் சூர்யா 7–ஆம் அறிவு படத்தில் புராண கெட்டப்பில் வந்தார். வடிவேலு ஏற்கனவே இம்சை அரசன் 23ம் புலிகேசியில் நடித்தார். தற்போது மீண்டும் தெனாலி ராமன் என்ற சரித்திர படத்தில் மன்னர் வேடத்தில் கலக்கி வருகிறார்.