வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள உணவகத்தில் தீ விபத்து!!

686

 

வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள சுபாஸ் உணவகத்தில் இன்று (09.06.2018) மாலை 6 மணியளவில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த உணவத்தின் சமையல் அறையில் உள்ள சமையல் எரிவாயு வெடித்ததில் இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் விரைந்து செயற்பட்ட நகரசபையின் தீயணைப்புப் படையினர் தீயினை சில நிமிடங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இத் தீ விபத்து காரணமாக பாரிய சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என சம்பவ இடத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.