குழந்தைக்கடத்தல்காரர்கள் என்று தவறாக நினைத்த நபர்களை அடித்தே கொன்ற ஊர் மக்கள். அசாம் மாநிலம் கவுகாத்தியில் அங்லாங் அருகில் உள்ள டோக்மோகோ பகுதியில்தான் மேற்கண்ட சம்பவம் நடந்துள்ளது.
கவுகாத்தியில் குழந்தை கடத்தல்கள் அதிகமாக நடந்த நிலையில் சம்பந்தப்பட்ட பகுதியில்தான் கடத்தல்காரர்கள் நடமாடுவதாக சமூகவலைத்தளங்கள் மூலமாக வதந்திகள் பரவியது.
இந்நிலையில் டோக்மோகோ மிகுதியில் அபிஷித் நாத் எனும் இளைஞரும் நிலோட்ப்பாள் தாஸ் எனும் இளைஞரும் அவர்களது காரில் சென்றிருக்கின்றனர்.
அவர்களை குழந்தைக்கடத்தல் காரர்கள் என நினைத்த ஊர்மக்கள் அவர்களை காரில் இருந்து வெளியே இழுத்து அடித்துள்ளனர். அடி தாங்காமல் ஒரு கட்டத்தில் இவ்விரு இளைஞர்களும் இறந்து விட்டனர். இது சம்பந்தமான வீடியோ காட்சிகளும் தற்போது வெளிவந்துள்ளது.
அதில் ஒரு இளைஞர் நாங்களும் அசாம் வாசிகள் தான் எங்களை அடித்தே கொன்று விடாதீர்கள் என்று கெஞ்சுகிறார். தனது அப்பா அம்மா பெயரை கூறி தங்களை விட்டுவிடும்படி கதறுகிறார்.
ஆனால் உள்ளூர்வாசிகள் தொடர்ந்து தாக்கியதால் அவர்கள் இருவருமே உயிர் இழந்தனர். இந்த சம்பவத்தை அம்மாநில முதலமைச்சர் கடுமையாக கண்டித்ததோடு பொலிஸ் விசாரணையையும் மேற்கொள்ள ஏற்பாடு செய்திருக்கின்றார்.
வதந்திகளை நம்பி அப்பாவி மக்களை கொல்வது வாடிக்கையாகவே ஆகிவிட்டது. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பொறியாளர் எனவும் மற்றவர் வியாபாரி எனவும் தெரிவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.





