முதன்முறையாக கமலுடன் இணையும் சந்தானம்!!

394

santhanamவிஸ்வரூபம்-2 படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிசியாக இருக்கிறார் நடிகர் கமல். இப்படத்தை முடித்த கையோடு இவருடைய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல். இப்படத்திற்கு உத்தம வில்லன் என்று பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஏற்கெனவே ஒப்பந்தமாகியிருந்தார். இப்போது கமலுடன் நடிகர் சந்தானமும் கைகோர்த்துள்ளார். கமலுடன் சந்தானம் சேர்ந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இவரும் கமலுடன் இணைவது இதுவே முதல்முறை.

இப்படத்தை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் இந்த படம் உருவாகிறது.