வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து சந்தேகநபர் ஒருவர் தப்பியோட்டம் : பொலிசார் தீவிர தேடுதல்!!

602

வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து இன்று (09.02.2018) காலை 10 மணியளவில் சந்தேகநபரொருவர் தப்பியோடியுள்ளார்.

பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபரொருவரை வவுனியா பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற சமயத்தில் குறித்த நபர் தப்பியோடியுள்ளார்.

அவரை கந்தசுவாமி ஆலய வீதி, மில் வீதி, பஜார் வீதிகளில் பொலிஸார் தேடியபோதிலும் சந்தேகநபரை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.