இரண்டாம் உலகம் படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை வாங்கிய ஆர்யா!!

515

Arya-Ciku-bukuநடிகர் ஆர்யா “தி ஷோ பீப்பிள்” என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன்மூலம் சில திரைப்படங்களை வாங்கி தமிழகத்தில் விநியோகம் செய்துள்ளார். முதன்முதலாக தன் தம்பி சத்யா ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள இரண்டாம் உலகம் படத்தின் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் திரையரங்கு உரிமையை ஆர்யா வாங்கியுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் உருவான இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். பாடலுக்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பின்னணி இசையமைப்பை அனிருத் அமைத்துள்ளார். இந்த படத்தை பி.வி.பி.சினிமாஸ் பிரம்மாண்டமான முறையில் தயாரித்திருக்கிறது.

இப்படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கைக் குழுவினர் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் இப்படம் வெளிவரவிருக்கிறது. தெலுங்கில் ‘வர்ணா’ என்ற தலைப்பில் வெளிவருகிறது. வருகிற 22ம் திகதி இப்படத்தை வெளியிடவுள்ளனர்.