இராணுவ அதிகாரியை உருக வைத்த விஸ்வமடு மக்கள் : கண்ணீர் விட்டு கதறி அழுகை!!

471

விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து, அம்பேபுஸ்ஸ முகாமிற்கு இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் இராணுவ கேர்ணல் ரத்தனபிரிய பந்துவிற்கு அப்பகுதி மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இன்று தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்த பதிவில்,

சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மற்றும் விஸ்வமடு மக்கள் ஆகியோர் கண்ணீருடன் கேர்ணல் ரத்தனபிரிய பந்துக்கு பிரியாவிடை கொடுத்துள்ளனர்.

பாதுகாப்பு படைகளில் வடக்கில் உள்ள மக்களை உண்மையில் நேசிக்கும் அதிகாரிகள் இருப்பதுடன், அவர்களை நேசிக்கும் மக்களும் இருக்கின்றனர்.

இந்த நெகிழ்ச்சி சம்பவம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக தம்புள்ளையை சேர்ந்த நபரொருவர் எனக்கு இந்த புகைப்படங்களை அனுப்பியிருந்தார் என தெரிவித்துள்ளார்.