நித்தியானந்தா பீடத்தில் உள்ள என் மனைவியை மீட்டுத்தாருங்கள் : கதறும் கணவன்!!

784

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நித்யானந்தா பீடத்தில் இருக்கும் எனது மனைவியை மீட்டு கொடுக்கும் படி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் வடுகம் முனிப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. விவசாயியான இவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், என் மனைவியும், மகனும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள நித்யானந்த பீடத்திற்கு சென்றதாகவும், அங்கு சென்ற என் மனைவி இன்று வரை வீடு திரும்பவில்லை எனவும், இதனால் உடனடியாக மீட்டு தர நடவடிக்கை எடுக்கும் படி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு எனது மனைவியும், மகனும் நித்தியானந்தா பீடம் சென்றனர். சென்ற அவர்கள் பல மாதங்களாக வராத காரணத்தினால், பீடத்திற்கு சென்ற நான் என் மகனை மீட்டு வந்துவிட்டேன். ஆனால் மனைவியை மீட்க முடியவில்லை.

இதனால் தினந்தோறும் பல பிரச்சனைகளை சந்திக்கிறேன். அவள் வாங்கிய வங்கி கடனையும் அடைக்க முடியாமல் தவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.