மலேசிய பெண்ணுக்காக என்னை ஏமாற்றிவிட்டாரே : கதறும் கலக்கப்போவது யாரு நவீனின் காதலி!!

603

பிரபல மிமிக்கிரி கலைஞர் தன்னை ஏமாற்றிவிட்டதாக அவரது காதலி திவ்யலட்சுமி என்பவர் பொலிசிலில் புகார் அளித்துள்ளார்.

திவ்யலட்சுமி கூறியதாவது, நான் 11 ஆம் வகுப்பு படிக்கும்போது எங்கள் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தோம்.

வழக்கம்போல எங்களின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்புகள் கிளம்பின. அதை எதிர்த்து நண்பர்கள் முன்னிலையில் அரக்கோணத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பதிவுத் திருமணம் செய்துகொண்டோம்.

அலைபாயுதே படம் போல இருவரும் அவரவர் வீட்டில் வசித்துவந்தோம். நவீனுக்காக நான் பல உதவிகளைச் செய்தேன்.

எங்களின் திருமணம் வீட்டில் தெரிந்துவிட்டது. நவீனின் தங்கைக்குத் திருமணம் முடிந்ததும் என்னை அவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தார்.

அவருக்காக நான் விஸ்காம் படித்தேன். பிரபல தனியார் தொலைக்காட்சியில் வாய்ப்பு வாங்கிக் கொடுக்க உதவி செய்தேன்.

அதில் மிமிக்ரி கலைஞராக நடித்த நவீனுக்குப் பெயரும் புகழும் கிடைத்தது. பல நிகழ்ச்சிக்காக வெளிநாடுகளுக்குச் சென்றார்.

அப்போதுதான் மலேசியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண், நவீனைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். அவரிடம் நவீன் எனது கணவர் என்று கூறியபோதும் அவர் அதைக் கேட்கவில்லை.

தற்போது நவீன் மீது பொலிசில் புகார் அளித்துள்ளேன், எனக்கு நீதி கிடைக்கும் வரை என்னுடைய போராட்டம் தொடரும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் நவீன், திவ்யலட்சுமியை எனக்குத் தெரியும். ஆனால், அவரை நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. என்னை அவர் ஏமாற்றிவிட்டார். எனக்கும் அவருக்கும் திருமணம் நடந்ததாக அவர் பொய் சொல்கிறார். சட்டப்படி அந்தப் பிரச்னையைச் சந்தித்துவருவதாக கூறியுள்ளார்