சிறுமிகளுக்கு பாலியல் கல்வியை சொல்லிக் கொடுக்கும் புதிய வீடியோ அறிமுகம்!!

345

computer time at homeசீனாவில் சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் கல்வியை சொல்லிக் கொடுக்கும் வகையிலான புதிய கார்ட்டூன் வீடியோ வெளியாகியுள்ளது.

சீனாவில் சிறுவர், சிறுமிகள் அதிகளவு பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது சமீபகாலமாகவே அதிகரித்து வந்தது. இதனையடுத்து இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தனியார் நிறுவனம் ஒன்று முடிவு செய்தது.

இந்நிறுவனத்தின் சார்பில் வீடியோ காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிறுவர்- சிறுமியருக்கு பாலியல் கல்வியை கற்றுத் தரும் அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

கார்ட்டூன் படங்களின் மூலம் விளக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் முக்கிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்றைய சிறுவர்களுக்கு இந்த வீடியோ காட்சிகள் மிக அவசியமானவை என இதனை வடிவமைத்தவர் கூறியுள்ளார்.

மேலும் பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வீடியோ வெளியான சில தினங்களிலேயே, 10 லட்சத்திற்கும் மேலானோர் இதனை பார்வையிட்டுள்ளனர்.