25 ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழி : தமிழகத்தை உலுக்கிய படுகொலை சம்பவம்!!

907

தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக அவரது மகன் கொலையாளியை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் உள்ள தாதம்பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் நல்லசாமி(வயது 50), மரம் வெட்டும் தொழிலாளியான இவர் கடந்த 10ம் திகதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து இவரது மகன் சுரேஷ் பொலிசில் புகார் அளிக்க, தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.



விசாரணையில் தமிழ்செல்வன் மற்றும் அவரது நண்பர்கள் குமார், வினோத்குமார், முருகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

அதாவது தமிழ் செல்வனின் தந்தையை நல்லசாமி 25 ஆண்டுகளுக்கு முன்பு அவரது நண்பர் பூபதியுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். இதற்காக இருவரும் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அனுபவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பூபதி கொல்லப்பட்ட நிலையில், தற்போது நல்லசாமியும் இறந்துள்ளார். மகனை பார்க்க வரும் போது நல்லசாமியை தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் சம்பவ தினத்தன்று டாஸ்மாக் கடையில் நல்லசாமியை பார்த்த குமார், தமிழ்செல்வனுக்கு தகவல் அளித்துள்ளார். நண்பர்களுடன் விரைந்து தமிழ்செல்வன் நல்லசாமிக்கு மது வாங்கி கொடுத்து மயக்கமடைய செய்துள்ளார்.

அடுத்து பரமத்திரோட்டில் உள்ள லொறி பட்டறைக்கு அழைத்து சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

ஏற்கனவே தமிழ்செல்வன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.