வவுனியாவில் சுய முயற்சி சேமிப்பு எனும் தொனிப்பொருளில் சிறுவர் சந்தை!!

979

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் ‘சிறுவர் சந்தை’ என்ற நிகழ்வு இன்று (14.06) பாடசாலையின் அதிபர் ரட்ணசிங்கம் நவரட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக ஆரம்பபிரிவு உதவிக்கல்வி பணிப்பாளர் சிவலிங்கம் முரளிதரன் கலந்துகொண்டு சிறுவர் சந்தையை திறந்து வைத்தார்.

ஆரம்பபிரிவு மாணவர்களுக்காக தனியார் வங்கி ஒன்றின் அனுசரணையுடன் செயற்படுத்தப்பட்ட அந்நிகழ்வில் சிறுவர்களின் ஆழுமையை வளர்க்கவும் இச்சிறுவர் சந்தையூடாக பெறப்படும் நிதியானது சிறுவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் சந்தை நிகழ்வில் சிறுவர்கள் வியாபாரிகளாகவும், விவசாயிகளாகவும் வேடமிட்டு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன், அதிதிகள் சிறுவர் சந்தையை பார்வையிட்டு சிறுவர்களை ஊக்குவித்திருந்தனர். மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு ஆர்வமுடன் பொருட்களை கொள்வனவு செய்தனர்.

நிகழ்வில் பாடசாலைகளுக்கான வலயப் பிரதிநிதி கு.வசந்தகுமாரி, டி.எப்.சி.சி வங்கியின் பிராந்திய முகாமையாளர் ஆர்.ரவீந்திரா, முகாமையாளர் எஸ்.வில்லவராஜன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.