பட்டையக் கிளப்பும் வடிவேலு!!

284

vadiveluகிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றார் வடிவேலு. இந்த இடைவெளியே தெரியாத அளவுக்கு ரசிகர்கள் மனதில் அழுத்தமாகப் பதிய வேண்டும் என்பதற்காக, ரொம்பவே கஷ்டப்படுகின்றார்.

அதுவும் காமெடியனாக இல்லாமல் ஹீரோ + காமெடியன் வேடம் என்பதால் தனது வழக்கமான நடிப்பில் சில மாற்றங்களைச் செய்ய முடிவெடுத்திருக்கிறார் வடிவேலு.

தற்போது அவர் நடித்து வந்த ஜெகஜால புஜபல தெனாலிராமன் படத்தின் பெரும் பகுதி முடிந்து விட்டது. இப்படத்திற்காக தெனாலிராமன், மன்னர் என இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார் வடிவேலு.

ஒரு கரக்டருக்கும், மற்றொரு கரக்டருக்கும் இடையே வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காக தனது வழக்கமான உடல் பாவனையை முழுவதுமாக மாற்றி நடித்துள்ளாராம்.

அவர் ஏற்கனவே நடித்த படங்களின் எந்த சாயலும் தெரியாதாம். அதுமட்டுமில்லாமல் இந்த வித்தியாசம் இனி, படத்துக்குப் படம் பட்டையைக் கிளப்புமாம்.