தேம்பித் தேம்பி அழுத சச்சின்!!

302

sachinகிரிக்கெட் வாழ்க்கையில் ஓய்வு என்பது சகஜமானது தான், அதேபோன்று எனது ஓய்வையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார் சச்சின்.

இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கர்(40).
வருகிற 14ம் திகதி மும்பையில் தொடங்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

இதுகுறித்து சச்சின் கூறுகையில் நான் ஓய்வு பெற இன்னும் சில நாட்களே உள்ளன. 24 ஆண்டுகள் கிரிக்கெட்டுக்காக கொடுத்து விட்டேன் இனி குடும்பத்துக்காக நேரத்தை செலவிட உள்ளேன்.
ரசிகர்களின் பாசத்தை கண்டு நெகிழ்ந்து போகிறேன்.

சமீபத்தில் மும்பையில் உள்ள எனது நண்பரின் வீட்டிற்கு சென்றேன் என் வருகையை அக்கம் பக்கத்தினர் தெரிந்து கொண்டனர். உடனே என்னை நோக்கி பேட்டை உயர்த்தி கவுரவப்படுத்தினர் இதை பார்த்து வாயடைத்து போனேன்.

கொல்கத்தா டெஸ்டுக்கு பின் இந்திய அணியின் மசாஜர் பின்டு, தேம்பி தேம்பி அழுதார். ஓய்வு என்பது என் வாழ்வின் ஒரு பகுதி, அதற்காக நீங்கள் அழ வேண்டாம், அடுத்து வரும் இளம் வீரர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என ஆறுதல் கூறினேன்.

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர் சமர் பால், வீட்டிற்கு சென்றேன். அவருடைய வீடு முழுவதும் பரிசுப் பொருட்கள் நிரம்பியிருந்தன. என்வீடு பெரிதாக இருந்தாலும், அனைத்தையும் வைக்க இடம் இல்லை. அவரின் கட்டாயத்தால் சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டேன்.

கொல்கத்தா தெருக்களில் வைக்கப்பட்டிருந்த என் பெரிய கட் அவுட் மற்றும் ரசிகர்கள் என் முகமூடியை அணிந்திருந்ததை கவனித்தேன்.

இவர்களது ஆதரவுக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளேன், மும்பை டெஸ்டில் என்ன நடக்கும் என நிச்சயமாக சொல்ல முடியாது. இப்போட்டியில் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடிந்த அளவுக்கு முயற்சிப்பேன் என்று உருக்கமாக பேசியுள்ளார்.