கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற ரயிலில் மோதி இனந்தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் பொலிஸ் பிரிவில், தஹய்யாகம ரயில் நிலையத்திற்கு அருகில் இச்சம்பவம் நேற்று இரவு 08 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





