வீட்டு சமையலறையில் ஆயுதங்களை பதுக்கியவர் நீதிமன்றில் சரண்!!

718

surenderமிரிஹானை பிரதேசத்தில் பெருந் தொகையான ஆயுதங்களை மறைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி மிரிஹானை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி அப் பிரதேசத்தில் பொலிஸார் தேடுதல் மேற்கொண்டனர். இதன்போது வீடொன்றின் சமையலறையிலிருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

95 சிறிய கத்திகள், 240 அரிவால்கள், 56 பிளாஸ்டிக் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இந்த வீட்டில் மீட்கப்பட்டன.

குறித்த வீட்டின் உரிமையாளர் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று சட்டத்தரணி ஒருவர் ஊடாக நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

இந்நபர் அனுமதிப்பத்திரங்கள் இன்றியே இந்த ஆயுதங்களை வீட்டில் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.