கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய நபரை நாடு கடத்த பிரிட்டன் நடவடிக்கை!!!

527

groundஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை இலங்கைக்கு நாடு கடத்த பிரித்தானியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே சி.ஐ.டியினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

மேற்படி கிரிக்கெட் போட்டி ஐக்கிய இராஜ்ஜியத்தில் காடிப் நகர மைதானத்தில் கடந்த யூன் மாதம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.