மாலைதீவு பிரதிநிதிகள் பொதுநலவாய மாநாட்டில் மாநாட்டில் பங்குபற்ற மாட்டார்கள்! !

319

moldivesமாலைதீவில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் அதன் பங்குபற்றல் தொடர்பாக நிச்சயமற்ற தன்மை காணப்படுகிறது என தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர்களான முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஸீட், முன்னாள் சர்வாதிகார ஜனாதிபதியின் சகோதரரான யாமின் கயூம், மற்றும் வர்த்தகரான குவாஸிம் இப்ராஹிம் ஆகியோர் போட்டியிட்ட ஜனாதிபதி தேர்தலில் எவரும் 50 சதவீத வாக்குகளை பெறாத நிலையில் அடுத்த சுற்று ஜனாதிபதி தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.

புதிய ஜனாதிபதி இன்னும் தெரிவாகவில்லை என்பதால் தான் பதவிக்காலம் முடிந்தாலும் பதவியை இராஜினாமா செய்ய போவதில்லை என ஜனாதிபதி மொஹமட் கூறியுள்ளார்.

இதனால் மாலைதீவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலைமையில் கொழும்பு பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் மாலைதீவு பங்குபற்றுவது தெரடர்பாக எதுவும் கூறமுடியாத நிலைமை உருவாகியுள்ளது.