சீனாவில் ஒரு நாள் ஒன்-லைன் விற்பனையில் 50 ஆயிரம் கோடி!!

487

onineசீனாவில் புகழ்பெற்ற டி மால் இணையம் நேற்று ஒருநாள் மட்டும் ஒன்–லைனில் பொருட்கள் விற்பனையை நடத்தியது. அதற்காக காத்திருந்த சீனர்கள் அதில் பதிவு செய்து தனக்கு தேவையானவற்றை போட்டி போட்டு வாங்கினர்.

ஒன்–லைனில் பொருட்கள் விற்பனை நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கியது. உடனே காத்திருந்த மக்கள் அதில் பதிவு செய்ய தொடங்கினர்.

யுவான் கெரு என்ற முதுகலை பட்டதாரி பெண்ணும், அவரது காதலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை பதிவு செய்து வாங்கினர். யுவான் கெரு மட்டும் 15 ஆயிரத்துக்கு பொருட்கள் வாங்கினார்.

இவர்கள் தவிர சீனா முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் ஒன்–லைனில் பதிவு செய்து தேவையானவற்றை வாங்கினர். இதன் மூலம் ஒரே நாளில் 50 ஆயிரம் கோடிக்கு பொருட்கள் விற்பனை ஆனது.

அது சீனா வரலாற்றில் மிகப் பெரும் சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு ஒரே நாளில் 30 ஆயிரம் கோடி அளவில் விற்பனை ஆகி இருந்தது.