ஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்தே கண்டுபிடித்த கில்லாடி இளைஞர்கள் : எப்படி தெரியுமா?

305

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஐபோன் திருடியவனை பேஸ்புக் மூலம் வைத்து கண்டுபிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்தவர் சிமியோன். இவர் சமீபத்தில் தன்னுடைய சிம்கார்டை தொலைத்துவிட்டதால், உடனடியாக சென்னையின் புரசைவாக்கத்தில் இருக்கும் ஏர்டெல் ஷோ ரூமுக்கு சென்று புதிய சிம் வாங்கியுள்ளார்.

சிம் வாங்கிய பின் கடையை விட்டு வெளியே வந்த போது சிமியோனின் விலைமதிப்புமிக்க ஐபோன் காணமல் போயுள்ளது. இதனால் கடை முழுவதும் தேடியும் கிடைக்காததால், சிமியோன் சற்று யோசித்துள்ளார்.

அப்போது அவர் உள்ளே நுழையும் போது தட்டிவிட்டு போன நபர் மீது சந்தேகம் வந்துள்ளது. அந்த சந்தேகத்தை அடிப்படையாக வைத்து சிசிடிவி காட்சிகளை போட்டுக்காட்ட சொல்லி இருக்கிறார் சிமியோன். அவர்களும் போட்டுக் காட்டி இருக்கிறார்கள்.

அதில் அந்த நபர் தான் போனை எடுத்துச் சென்றுவிட்டார் என்பது உறுதியாகியுள்ளது. ஆள் தெரிந்த போது, தப்பித்துவிட்டாரே என்று எண்ணி போது, அவர் உடனடியாக அந்த ஷோ ரூமில் போனை திருடியவரிடன் நம்பர் இருக்கிறதா என்று கேட்டுள்ளார்.

அதன் பின் அவர்கள் கொடுத்த நம்பரை ட்ரூ காலரில் போட்டு தேடி இருக்கிறார். அந்த சிம் பீகாரில் உள்ளது என தெரிய வந்துள்ளது. அதே நம்பரை வைத்து பேஸ்புக்கில் துழாவிய போது போனை எடுத்தவரின் பேஸ்புக் அக்கவுண்ட கிடைத்துள்ளது.

சிசிடிவி புட்டேஜில் உள்ள முகமும் பேஸ்புக் முகமும் பொருந்தியுள்ளது. உடனடியாக அவரது நண்பர்களை தொடர்பு கொண்டு நம்பரை கேட்டிருக்கிறார்கள்.

அவர்கள் யாரும் கொடுக்கவில்லை என்பதால், வடநாட்டு மொழியில் அவரின் நண்பர்களிடம் எங்க நண்பர் ஒருவருக்கு அவர் ஆலோசகராக இருந்தார். ஆனால் அவர் தற்போது எங்க இருக்கிறார் என்று கேட்ட பின்பு நம்பர் கொடுத்துள்ளனர்.

அதன் பின் அவரைப் பற்றி விசாரித்த போது மாதவரம் பகுதியில் இருப்பது தெரியவந்ததால், அங்கு போய் காத்துள்ளனர். ஆனால் திருடன் சிக்காததால், மறுநாள் மீண்டும் அங்கு சென்று நின்றுள்ளனர்.

திட்டமிட்ட படி திருடன் வர, அவனை பிடித்து விசாரித்த பின்னர் கடைசியாக போன் கைக்கு கிடைத்துள்ளது. இவை அனைத்தையும் சிமியோன் தனி ஒருவனாக செய்யவில்லை, இவருடைய நண்பர் ஜாபரும் உடன் இருந்து உதவியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த இவர்கள் இருவரைப் பற்றி தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.