தேசியத்தில் மூன்று புதிய சாதனைகளை பதிவு செய்த தமிழ் வீராங்கனை!!

378

பொல­ன­று­வை­யில் நடை­பெற்­று­வ­ரும் தேசி­ய­மட்ட பளு­தூக்­கல் போட்­டி­யில் வட­மா­கா­ணத்­தைப் பிர­தி­நி­தித்­துவம் செய்த வி.ஆசிகா மூன்று புதிய சாத­னை­க­ளைப் படைத்­தார்.

44ஆவது தேசி­ய­மட்ட பளு­தூக்­கல் போட்­டி­கள் தற்­போது நடைபெற்று வரு­கின்­றன.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற பெண்­க­ளுக்­கான பளு­தூக்­கல் போட்­டி­யில் வட­மா­கா­ணத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த ஆசிகா 63 கிலோ எடைப்­பி­ரி­வில் சினெச் முறைப் போட்­டி­யில் 76 கிலோ பளு­வை­யும்,

கிளீக் அன்ட் ஜக் முறை­யில் 97 கிலோ பளு­வை­யும் ஒட்­டு­மொத்தமாக 173 கிலோ பளு­வை­யும் தூக்கி தங்­கப்­ப­தக்­கம் வென்­றார்.

இந்த மூன்­றும் அவ­ரால் தேசிய ரீதியில் படைக்­கப்­பட்ட புதிய சாதனை­க­ளாக அமைந்­துள்­ளன.