பள்ளி வாகனத்தில் மது அருந்தியதை கண்டித்த காவலர் அடித்துக் கொலை!!

588

சென்னைக்கு அருகில் உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் மோகன் ராஜ் என்பவர் காவலராக பணி புரிந்து வந்தார்.

வேலூரை சேர்ந்த இவர் கடந்த வாரம்தான் மாற்றலாகி சுங்குவார் சத்திரம் வந்திருக்கிறார். நேற்று பணி முடிந்து மோகன் ராஜ் வீடு திரும்பி கொண்டிருக்கையில் பள்ளி வாகனம் ஒன்றில் சிலர் மது அருந்தி கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார்.

இங்கு ஏன் குடிக்கிறீர்கள் என்று காவலர் மோகன் ராஜ் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த குடிகாரர்கள் மோகன் ராஜ் மீது மது பாட்டிலை உடைத்து வீசியுள்ளனர். மேலும் உடைந்த பாட்டிலால் அவரது கழுத்தில் குதியுள்ளனர் .

இதனால் சம்பவ இடத்திலேயே காவலர் மோகன் ராஜ் உயிரிழந்தார். அதன் பின் அவரை ரோட்டில் வீசிவிட்டு குற்றவாளிகள் தப்பினர்.

காவல்துறைக்கு தகவல் அறிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றினர், கொலையாளிகளை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த மோகன் ராஜுக்கு அன்பு ரோஜா என்கிற மனைவியும், அஷ்வின், அவினாஷி , அஜயா என மூன்று குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.