கொழும்பு குழந்தை பராமரிப்பு இல்லத்தில் நடந்த கொடூரம் : காணொளியால் சர்ச்சை!!

615

கொழும்பு குழந்தை பராமரிப்பு இல்லத்தில் குழந்தை ஒன்று மிகவும் மோசமாக நடத்தப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தமது பிள்ளைக்கு ஏற்பட்ட நிலை குறித்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தமது குழந்தைக்கு நோயுற்ற போதிலும், மருந்து வழங்காமல் சுமார் 4 மணித்தியாலங்கள் அழுத குழந்தையை கண்டுகொள்ளாமல் வெளியே வைத்து பூட்டி விட்டதாக கொழும்பு குழந்தை பராமரிப்பு இல்லத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குழந்தை வெளியே இருந்து கதவை தட்டி அழும் காட்சியை குறித்த குழந்தை பராமரிப்பு இல்லத்திற்கு அருகில் உள்ளவர்களினால் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த காணொளி பேஸ்புக்கில் வெளியாகியுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் குழந்தை பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைய குழந்தை பராமரிப்பு இல்லத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

“பெற்றோர் என்ற ரீதியில் நாம் இந்த சம்பவத்தை அப்படியே விட்டுவிடப்போவதில்லை, முடிவு கிடைக்கும் வரை தொடர்வோம். இந்தளவு கொடூரமாக குழந்தையை தண்டிப்பதற்கு குழந்தை என்ன செய்தது… என் மகன் பல மணி நேரம் அழும் வரை பார்த்து கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் மனிதாபிமானமற்ற குருடர்கள். குழந்தை பராமரிப்பு இல்லத்தில் விடப்படும் மற்றைய குழந்தைகளுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும். எனது குழந்தை பல மணி நேரம் அழுததனை அயலவர்கள் பார்த்துள்ளனர். அவர்கள் இதனை உறுதி செய்து வாக்குமூலம் வழங்கியுள்ளனர்..” என பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

குழந்தை அன்றைய தினம் சுகயீனமடைந்துள்ளதாகவும், குழந்தைக்கு மருந்து வழங்காமல் அழ விட்டுள்ளதாகவும் பெற்றோர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.