வவுனியாவில் வியாபார நிலையம் ஒன்றில் நேற்று தேங்காயின் விலையை விளம்பரப்பலகையில் காட்சிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்து வியாபார நிலைய உரிமையாளருக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்புச்சபையின் அதிகாரிகளினால் தண்டம் அறிவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்,
வவுனியா சாந்ததோலையிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் சென்ற விலை கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் வியாபார நிலையத்திலுள்ள பொருட்களை பரிசோதனைக்குட்படுத்தினார்கள். இதையடுத்து வர்த்தக நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்ட விலைப்பட்டியல் விளம்பரப்பலகையில் தேங்காயின் விலை காட்சிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்து குறித்த வியாபார நிலைய உரிமையாளருக்கு ரூபா 3000 தண்டம் அறவிடப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியா நகர்ப்பகுதியில் அதிகளவில் தேங்காய் வியாபாரம் மேற்கொள்ளும் வர்த்தக நிலையங்களில் தேங்காயின் விலை காட்சிப்படுத்தப்படுவதில்லை.
நகர்ப்பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு ஒரு சட்டமும் கிராமப்புங்களிலுள்ள வியாபார நிலையங்களுக்கு வேறு ஒரு சட்டத்தினையும் விலைக்கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





