கொழும்பு துறைமுகத்திற்கு 11.6 கடல் மைல் தூரத்தில் “முத்தா பயனியர்” என்ற வர்த்தக கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் கப்பலில் இருந்த அனைவரும் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
டொமினிக்கா கொடியுடன் பயணித்து கொண்டிருந்த வர்த்தக கப்பலின் கப்டனால் கப்பலை கட்டுப்படுத்த முடியாமல் இடது பக்கமாக சரிந்துள்ளதாக கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டவுடன், உடனடியாக செயற்பட்ட கடற்படையினர் கப்பல் ஊழியர்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கப்பலில் காப்பற்றப்பட்டவர்களில் 10 இலங்கையர்கள் மற்றும் இந்தோனேசிய நாட்டவர்களும் அடங்குகின்றனர்.
இந்த கப்பலின் உரிமையாளர் இந்தியர் எனவும், குறித்த கப்பலில் இருந்து மீட்டகப்பட்டவர்கள் கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.









