இலங்கையில் மாற்றமடையவுள்ள விசா நடைமுறை!!

391

இலங்கையில் விசா நடைமுறையில் விரைவில் மாற்றம் ஏற்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசா கட்டணத்தில் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான புதிய விதிகள் கொண்ட ஒரு வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடவுள்ளதாகவும், அவை, சட்ட மா அதிபரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் விசா முறை நீண்ட காலமாக மேம்படுத்தப்படாமல் உள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.