தேசிய பரீட்சைகளில் அதி கூடிய புள்ளிகளைப் பெறுவோரை பிரபல்யப்படுத்த வேண்டாம்!!

263

பாடசாலை மாணவர்கள் தோற்றும் தேசிய பரீட்சைகளில் அதி கூடிய புள்ளிகளை, பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளும் மாணவ மாணவியரை பிரபல்யப்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உளவியல் மருத்துவர்கள் இலங்கை பரீட்சை திணைக்களத்திடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அண்மையில் பரீட்சைகள் திணைக்களத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகளில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவ மாணவியரை பிரபல்யப்படுத்துவதனால் ஏனைய பல மாணவ மாணவியர் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர் என உளவியல் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பரீட்சை தொடர்பிலான தேவையற்ற போட்டியினால் மாணவ மாணவியர் கடும் உளவியல் அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்ற நிலைமைகள் உயர்வடைந்துள்ளன.

இந்த விடயம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மாணவர்களை பிரபல்யப்படுத்தல் தொடர்பில் கொள்கை அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டியது கல்வி அமைச்சேயாகும் என பரீட்சை திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.