விசேட பௌர்ணமி தினத்தில் சாதனை படைத்த இலங்கையர்!!

343

ரம்புகனையில் இருந்து தலதா மாளிகைக்கு 4 மணித்தியாலங்களில் நடந்து நபர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். வருடத்தின் விசேட பௌர்ணமி தினமான நேற்று இந்த சாதனை படைத்துள்ளார்.

தம்புகனை தியசுன்னத்த பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான எஸ்.பி.விக்ரம்சிங்க நேற்று தளதா மாளிகைக்கு தனது பயணத்தை ஆரம்பித்திருந்தார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எஸ்.பி.விக்ரம்சிங்க,

“நான் கடந்த 5 வருடங்களாக விசேட விடுமுறைகளில் 6 முறை அனுராதபுரத்திற்கு சென்றுள்ளேன். எனக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது கடற்படையின் பொறியியலாளர் பிரிவு முகாமில் சேவை செய்கின்றார். நண்பருடன் சிசிடீவி கமரா கட்டமைப்பு பொருத்தும் பணியில் நான் ஈடுபட்டு வருகின்றேன்.

வேலை இல்லாத நாட்களில் கிடைக்கும் எந்தவொரு வேலையும் செய்வேன். மனைவி வீட்டுப் பெண். நாங்கள் மிகவும் வறுமையிலேயே வாழ்ந்து வருகின்றோம். முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ வழங்கிய வீட்டிலேயே நாம் வாழ்ந்து வருகின்றோம். எனினும் ஆரோக்கியம் என்றால் என்ன என்பதனை நாட்டிற்கு வெளிப்படுத்த விரும்புகின்றோம்.

எனக்கு நடப்பது என்பது விருப்பமான ஒரு விடயம். நடப்பது ஆரோக்கியமான விடயமாகும். அதற்கமைய ரம்புகனைக்கு தனியாவே நடந்து செல்கின்றேன். 4 மணித்தியாலங்களில் தலதா மாளிகையை சென்றடைந்தவர், மீண்டும் அங்கிருந்து ரம்புகனைக்கு நடந்து சென்றுள்ளார்.

எனினும் ரம்புகனையில் இருந்து பயணத்தை ஆரம்பித்தவர் ஒரு இடத்திலேனும் நிற்காமல் கண்டி வரை பயணித்தமையே இதன் சாதனையாக கருதப்படுகின்றது.