டொலரின் பெறுமதி 200 ரூபாய் வரை அதிகரிக்கும்?

334

அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார கொள்கைகள் காரணமாக அமெரிக்க டொலரின் பெறுமதி 200 ரூபாய் வரை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சு மக்களின் பணத்தை வரை முறையின்றி பயன்படுத்து தொடர்பான தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ள இன்று நிதியமைச்சு வந்திருந்த பந்துல குணவர்தன, ஊடகங்கவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செயற்படுத்தப்பட்டால், இந்த நிலைமை மேலும் அதிகரிக்கும்.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வரும் போது கடனை செலுத்த போதுமான வருமானம் இருக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியது உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த அரசாங்கம் கடன்களுக்கான தவணை பணத்தை செலுத்திய பின்னர் வருமானத்தில் ஓரளவு பணம் சேமிக்கப்பட்டிருந்தது எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.