தன் உயிரை கொடுத்து மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சாரதி : நெகிழ்ச்சி சம்பவம்!!

287

மகாராஷ்டிராவில் டிரைவர் ஒருவர், தன்னுடைய உயிரை கொடுத்து பள்ளி மாணவர்களின் உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிராவின் விரார் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருபவர் பிரகாஷ் பாட்டீல்.

தினமும் பள்ளி மாணவர்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டு பள்ளியில் விடுவதும், பின்னர் பத்திரமாக அவர்களை வீட்டில் சேர்ப்பதும் தான் வேலையாக செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று விரார் பகுதியில் கடுமையான மழை பெய்ததால் வேகமாகவே பள்ளி விடுமுறை விடப்பட்டது.

இதனையடுத்து, பள்ளியிலிருந்து மாணவர்களை அழைத்து செல்லும்பொழுது, கடிமான மழை பெய்ததால் வழக்கமான பாதையில் பயணிக்காமல், வேறு பாதையில் சென்றுள்ளார்.

நரிகினி என்ற கிராமம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது, பலத்த மழையின் காரணத்தால் பேருந்தை நிறுத்தியுள்ளார்.

அப்போது மூன்று மாணவர்களின் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர், இதில் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் சிக்கவே, சற்றும் யோசிக்காமல் அவர்களை காப்பாற்றிய ஓட்டுநரால் மேலே வர இயலவில்லை.

தண்ணீரில் அளவு அதிகரித்ததால், பிடிமானத்தை இழந்த பிரகாஷ் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

உயிருக்கு போராடிய பிரகாஷை பார்த்த சிறுவர்கள் மூன்று பெரும், “மாமா மாமா” என சத்தமிட்டு உதவிக்கு அழைத்துள்ளனர். ஆனால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் வேகமாகவே பிரகாஷ் மாயமானார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், தீவிரமான தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஒரு கிமீ தூரத்தில் பிரகாஷ் உடலை கண்டெடுத்தனர்.

பிரகாஷ் மிகவும் நல்ல குணம் படைத்தவர், அவரை நம்பியே அவரது குடும்பம் இயங்கி வந்தது, அவரது மனைவி Pranali, மகள் Neha (16) மற்றும் மகன்கள் Harshal (13), Pratik (11) ஆகியோருக்கு, அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என அவரது அண்ணன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.