ட்ரம் ஒன்றினுள் பிணமாக கண்டுபிடிக்கப்பட்ட இளம்பெண் : கொலைகாரனைத் தேடும் பொலிசார்!!

344

அவுஸ்திரேலியாவில் காணாமல் போன ஒரு இளம்பெண் ட்ரம் ஒன்றினுள் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Larissa Beilby (16), Brisbaneஇலுள்ள பெண்கள் விடுதி ஒன்றிலிருந்து சில நாட்களுக்கு முன் காணாமல் போனாள்.

அவளை பொலிசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் Gold Coastஇல் வசித்து வரும் ஒரு பெண் வழக்குக்கு உதவிகரமான ஒரு தகவலை அளித்தார்.

கருப்பு நிற ட்ரக்கில் வந்த ஒரு நபர் அவரது வீடு அமைந்துள்ள பகுதி வழியாக சென்றதாகவும் அவனது ட்ரக்கின் பின்புறம் ட்ரம் ஒன்றிலிருந்து ஒரு கை வெளியே தொங்கிக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தேடுதல் வேட்டையைத் தொடர்ந்த பொலிசார், Stapylton பகுதியில் அந்த ட்ரக் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.

அந்த ட்ரக் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதோடு அதில் துப்பாக்கியால் சுடப்பட்ட துளைகளும், குண்டுகளும்கூட காணப்பட்டன.

அந்த ட்ரக்கிலிருந்த ட்ரம்மை சோதனையிட்டபோது அதில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிசார், Zlatko Sikorsky (34) என்ற மனிதன்தான் அவளைக் கொலை செய்து ட்ரம்மில் அடைத்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.

Zlatko Sikorsky ஏற்கனவே போக்குவரத்து விதிகளை மீறியதற்காக பொலிசாரால் பல முறை தண்டிக்கப்பட்டவன்.

இந்நிலையில் அவனுக்கும் Larissaவுக்கும் என்ன தொடர்பு என்றும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்றும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ள பொலிசார், ஆனால் அவர்களுக்குள் தொடர்பு இருப்பது மட்டும் நிச்சயம் என்று தெரிவித்தனர்.

அதே நேரத்தில் கிடைத்த உடல் Larissaவுடையதுதானா என்பதும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே தெரிய வரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார் அவன் 966 WKB என்ற எண்ணுள்ள சில்வர் நிற Holden Commodore காரில் தப்பியிருக்கலாம் என்றும் அவனைக் குறித்து தகவல் அறிந்தோர் பொலிசாருக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.