பக்கத்துக்கு வீட்டில் வசித்த அக்காவை முகநூலில் தேடிய தங்கை : நெகிழ்ச்சியான பாசப்போராட்டம்!!

477

அமெரிக்காவில் அடுத்த வீட்டில் இருந்த அக்காவை முகநூலெங்கும் தேடிய தங்கை பற்றிய சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவில் வசித்து வரும் ஹிலாரி கிளாரிசை அவரது பெற்றோர்கள் சிறு வயதில் வேறொருவருக்கு தத்து கொடுத்துள்ளனர்.

வளர்ந்து திருமணம் ஆன பின் தனது குடும்பத்தாரை சந்திக்கும் ஆசை ஹிலாரிக்கு ஏற்பட்டுள்ளது.

தனது மரணத்திற்கு முன் தனது குடும்பத்தாரை சந்திக்க வேண்டும் என்று தனது கணவருடன் அமெரிக்க முழுவதும் அலசியிருக்கிறார் ஹிலாரி.

தான் தத்து கொடுக்கப்பட்ட போது தரப்பட்ட ஆவணங்களின் உதவியுடன் தனது அக்கா பெயர் டான் ஜான்சன் என்பதை கண்டுபிடித்த ஹிலாரி அந்த பெயரில் உள்ள முகநூல் பக்கமெங்கும் தேடினார். இருப்பினும் அவரால் அவரது அக்காவை கண்டுபிடிக்க முடியவில்லை.

அமெரிக்க விஸ்கான்ஸின் பகுதியில் குடியேறினார். அங்குதான் அவரது அக்கா வசிப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவருக்கும் அக்காவிற்கும் உருவ ஒற்றுமை இருந்தாலும் இருவருக்கும் மிகப்பெரிய வயது வித்யாசம் இருந்தது. ஆகவே உருவ ஒற்றுமை வைத்து கண்டுபிடிக்க சிரமமாக இருந்திருக்கிறது.

இந்நிலையில் ஹிலாரியின் கணவர் தனது பக்கத்துக்கு வீட்டு பெண் ஒருவரை பார்த்த போது ஹிலாரியின் உருவ ஒற்றுமை அவரிடம் இருந்துள்ளது, இதனை ஹிலாரியிடம் கூறியிருக்கிறார்.

உடனடியாக பேச முடியாமல் சில நாட்கள் ஹாய் ஹலோ சொல்லி காலம் கடத்திய ஹிலாரி ஒருநாள் அவரது வீட்டிற்கு சென்று பேசும்போது அவரது பெயரை கேட்டிருக்கிறார்.

டான் ஜான்சன் என்று பதில் வந்தது, அவரது தந்தையின் பெயரை கேட்க அதற்க்கு பதில் சொன்ன டான் ஜான்சனை பார்த்து ஓவென்று ஆனந்தத்தில் கத்தியபடி அவரை கட்டிபிடித்திருக்கிறார் ஹிலாரி.

அதன் பின் டானுக்கு 18 வயது இருக்கும்போது தத்து கொடுக்கப்பட்ட சகோதரி தான்தான் என்று கூறியிருக்கிறார்.

இதனால் எதிர்பாராத சந்தோஷத்திற்கு ஆளான டான் ஜான்சன் “இது என் வாழ்வில் எதிர்பாராத சந்திப்பு. இந்த பந்தம் இறுதி வரை இனி தொடரும் ” என்று கூறி நெகிழ்ந்திருக்கிறார்.

தங்கையின் இந்த தேடுதலையும் பாசத்திற்கான போராட்டத்தையும் அமெரிக்க ஊடகங்கள் பாராட்டி வருகின்றன.