வவுனியாவில் மூங்கில் செய்கைக்கு ஆதரவாக பேரணி!!

797

வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து வழிப்புனர்வுப் பேரணி ஒன்று இன்று(29.06) காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகி மாவட்ட செயலகத்திற்குச் சென்று மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமாரிடம் மகஜர் ஒன்றினைக் கையளித்துள்ளனர்.

மூங்கிலை வளர்ப்போம் எமது வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம் எனும் பொருளில் சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், கிராமங்களின் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த வழிப்புணர்வுப் பேரணியானது பழைய பேருந்து நிலைய்திதிலிருந்து ஆரம்பமாகி பிரதான கண்டி வீதி வழியாக மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்தது.

மூங்கிலினால் மண்வளம் நீர்வளம் பாதிப்பதாக இருந்தால் விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களை முன்வையுங்கள், அவ்வாறு தைரியமிருந்தால் பகிரங்க விவாதத்திற்கு வருவதற்கு தயாராகுங்கள்.

மூங்கில் நீர் வளம் மண்வளத்தை பாதிப்பதாக கூறும் மூங்கில் எதிர்ப்பாளர்கள் ஒன்றை மறந்தவிட்டனர். பார்த்தீனியம் ஒழிப்பு என்று ஆரம்பித்தனர் அதுமட்டுமல்ல பார்த்தீனியத்திற்கு நீதிமன்ற தடை சட்டம் கூட உள்ளது குற்றப்பணம் கூட அறவிடப்பலாம். மூங்கில் செய்கை மூலம் உலகில் வல்லரசாகிய நாடுகள் எத்தனை என்பது தொயுமா? மூங்கில் வளர்த்து விற்பனை செய்வதால் ஒரு பயனாளி குடும்பம் ஒரு மாதம் உழைக்கும் வருமானம் தெரியுமா? போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டப்பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமாரிடம் பேரணியினை மேற்கொண்டவர்கள் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினைக் கையளித்துள்ளனர்.