விமான விபத்தில் பலியான பெண் : தந்தையிடம் பேசிய கடைசி வார்த்தைகள்!!

352

மும்பையில் நேற்று குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலியாகினர்.

Juhu விமான நிலையத்திலிருந்து இரண்டு விமானிகள் உட்பட நால்வருடன் பயிற்சிக்காக Beechcraft King Air C90 என்ற விமானம் மும்பை விமான நிலையத்துக்கு புறப்பட்டது.

இதில் எதிர்பாராதவிதமாக காட்கோபர் பகுதி சர்வோதயா நகரில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் விபத்துக்குள்ளானது, இதில் ஐந்து பேர் பலியாகினர்.

விசாரணையில், குறித்த விமானம் கடந்த 2009ம் ஆண்டு உத்தரபிரதேச அரசிடம் இருந்து மும்பையின் யுவி ஏவியேஷன் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

கடந்த 10 ஆண்டுகளாகவே விமானம் பறப்பதற்கு எந்தவொரு தகுதிச்சான்றையும் பெறவில்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் விபத்தில் பலியான Surabhi Gupta என்ற பெண், காலை தனது தந்தையுடன் போனில் பேசியுள்ளார்.

அப்போது, மோசமான நிலையில் உள்ள விமானத்தில் பயணிக்க இருப்பதாக கூறியுள்ளார், அதற்கு, யார் அனுமதி கொடுத்தது என தந்தை கேட்டுள்ளார். மேலும் இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விமானப்போக்குவரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சோதனை ஓட்டத்துக்கு விமானம் பறக்க வேண்டுமென்றால்கூட தகுதிச்சான்றிதழ் இன்றி பறக்கக் கூடாது.

ஆனால், இந்த விமானம் கடைசியாக 6 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டு, பறந்துள்ளது, விசாரணை நடத்தி வருகிறோம்.

விமானத்தில் கருப்புப் பெட்டியை ஆய்வு செய்தபின், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும் என தெரிவித்துள்ளார்.