காணாமல் போன கணவர் : 11 ஆண்டுகளுக்கு பின்னர் மனைவி செய்த அதிர்ச்சி செயல்!!

723

தமிழ்நாட்டில் மாயமான கணவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு 11 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி பொலிசில் புகார் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் செம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (54). இவரது மனைவி செல்வி (51). தம்பதிக்கு விஜயா என்ற மகள் உள்ள நிலையில் அவருக்கு திருமணமாகி விட்டது.

கடந்த 2007-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந் திகதி ஆறுமுகமும், செல்வியும் அங்குள்ள கோவிலுக்கு சைக்கிளில் சென்றனர்.
பின்னர் மனைவியிடம் ஆறுமுகம், நீ வீட்டுக்கு போ, நான் எனது அம்மா வீட்டுக்கு போய் வருகிறேன் என கூறியுள்ளார்.

ஆனால் அதன் பின்னர் ஆறுமுகம் வீடு திரும்பவில்லை. கடந்த 11 ஆண்டுகளாக மாயமான கணவரை பல இடங்களில் தேடி தேடி பிறகு அப்படியே மறந்து விட்டார் செல்வி.

இந்நிலையில் திடீரென கணவர் நினைப்பு வந்த செல்வி காவல் நிலையத்துக்கு சென்று தனது கணவரை காணவில்லை, கண்டுபிடித்து கொடுங்கள் என கூறியுள்ளார்.

புகார் மனுவில், 11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கணவரை கண்டுபிடித்து கொடுங்கள் என்று செல்வி எழுதி இருப்பதை பார்த்து பொலிசார் திடுக்கிட்டனர்.

இது குறித்து அவரிடம் விசாரித்த போது நான் உலக நடப்பு தெரியாதவள். வெளி உலகம் பத்தி எனக்கு அவ்வளவாக தெரியாது காணாமல் போன என் கணவர் வருவார், வருவார் என இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தேன், ஆனால் அவர் வரவில்லை.

அதனால் புகார் அளிக்க தற்போது வந்தேன் என கூறியுள்ளார். புகாரை பெற்ற பொலிசார் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.