தெஹிவளையில் ஏற்பட்ட அனர்த்தம் : 17வது மாடியில் இருந்து விழுந்த இருவர் பரிதாபமாக பலி!!

568

தெஹிவளை, அனாகரிக்க தர்மபால மாவத்தையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் தொகுதியில் இருந்து விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர்.

17 மாடியை கொண்ட வீட்டுத் தொகுதியின் 14வது மாடியில் இருந்து விழுந்தவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் பிபிலை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான நபர் எனவும், மற்றைய நபர் 45 வயதானவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று காலை 11.30 மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த கட்டடத்தின் லிப்ட் பொருத்தும் போது குறித்த இருவரும் இவ் விபரீதத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.