கேரளாவை உலுக்கிய ஆணவப் படுகொலை : மூளையாக இருந்தவர் சிக்கினார்!!

658

கேரளாவில் உயர் சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்ததற்காக கெவின் பி ஜோசப் என்ற தலித் கிறிஸ்துவர் கடந்த மே மாதம் 27ம் திகதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.

கோட்டயம் அருகே நாட்டாசேரி நீலமங்கலம் பகுதியைச் சோ்ந்த தலித் கிறிஸ்தவ இளைஞரான கெவின் ஜோசப். இவரும், கொல்லம் அருகே தென்மலை பகுதியைச் சோ்ந்த நீனுவும் கடந்த மூன்று ஆண்டுகளுக்காக காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு நீனுவின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை, பணம் தருகிறோம் என பேரம் பேசியும் சாதகமாக அமையவில்லை.

பல்வேறு மிரட்டல்களுக்கு மத்தியில் நீனுவும், கெவினும் கடந்த மே மாதம் 24ம் திகதி பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து நீனுவை, பெண்கள் விடுதியில் கெவின் தங்கவைத்துள்ளார், அவரும் அனீஷ் என்ற உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் அதேமாதம் 27ம் திகதி அனீஷின் வீட்டுக்கு வந்த நீனுவின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் அனீஷ் மற்றும் கெவினை அடித்து காரில் தூக்கிச்சென்றனர்.

அனீஷை பாதி வழியில் இறக்கிவிடப்பட்ட நிலையில், கெவின் நிலை தெரியாமல் போனது.

இதனையடுத்து நீனு, காவல்நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றும் அலட்சியம் காட்சியுள்ளனர், இந்நிலையில் மறுநாள் மிக கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார்.

கேரளா முழுவதும் பரபரப்பை கிளப்பிய இந்த வழக்கில், நீனுவின் உறவினர்களுக்கு சாதகமாக இருந்த பொலிஸ் உயரதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இச்சம்பவத்துக்கு மூளை காரணமாக இருந்தது நீனுவின் தாய் ரெஹ்னா தான் என அனீஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

கெவின் கடத்தப்படுவதற்கு ஒருநாள் முன்பாக ஆலப்புழா வந்த ரெஹ்னா, கெவினை மிரட்டியதாகவும், மற்றொரு உறவினர் வந்து சமாதானப்படுத்தி அழைத்து சென்றதாகவும் கூறியுள்ளார்.

இதை பொலிசிடம் தெரிவித்தும் ரெஹ்னாவை குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க பொலிசார் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் விசாரணையில் நீனுவின் குடும்பத்துக்கு பொலிஸ் அதிகாரிகள் துணை போவதால், சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.