200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த பேருந்து : 40 பேர் பரிதாபமாக பலி!!

716

உத்திரகாண்ட் மாநிலத்தில் பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 40 பேர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரகாண்ட் மாநிலம் பௌன் பகுதியிலிருந்து ராம்நகர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, Gween என்ற கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபொழுது, எதிர்பாராதவிதமாக 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளது.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீவிரமான மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை Dhumakot மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விபத்தில் 40 பேர் பலியாகியுள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதகவும் தெரிவித்துள்ளார். மேலும் விபத்திற்கான காரணம் குறித்தும் தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அம்மாநில முதல்வர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் இறந்தவர்களின் உறவினர்களிடம் இழப்பீடு தொகையாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.