முல்லைத்தீவில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!

575

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு அலகரைப் பகுதியில் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் காணாமல் போன இந்த இளைஞனை கடத்தி கொலை செய்த சந்தேகத்தின் பேரில் நெடுங்கேணி சேனைப்பிலவினை சேர்ந்த இருவரை பொலிஸார் கைது செய்து, விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் காணமல் போன இளைஞனை கடத்தி கொலை செய்து, எரிக்கப்பட்ட இடத்தை சந்தேகநபர் ஒருவர் இன்றைய தினம் அடையாளம் காட்டியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், எரிந்த சடலத்தின் எச்சங்கள் காணமல்போன இளைஞனுடையாதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் நெடுங்கேணி சேனைப்பிலவு பகுதியினைச் சேர்ந்த 22 வயதானவர் என தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.