வீட்டில் சடலமாக கிடந்த 11 பேரும் தற்கொலை செய்து கொண்டதற்கு இது தான் காரணமா?

484

இந்தியாவில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சாமியாரின் தலையீடு இல்லை என்று பொலிசார் கூறியுள்ளனர்.

டெல்லி புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. முதலில் இவர்கள் அனைவரும் தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இவர்களின் உறவினர் ஒருவர் அவர்கள் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, நிச்சயம் இது ஒரு கொலையாகத்தான் இருக்கும் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில் பொலிசார் நடத்திய விசாரணையில், அந்த வீட்டில் நிறைய கடிதங்கள், டைரிகள் கைப்பற்றப்பட்டது. அதில் எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும், எந்த நேரத்தில் தற்கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது.

இதனால் இது கொலையா, தற்கொலையா என்று தெரியாமல் பொலிசார் குழம்பி போய் நிற்கின்றனர். மேலும் இவர்களின் உடற்கு கூறு ஆய்விலும் கொலை செய்யப்பட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் சாமியார்கள் யாரும் தலையிட்டிருக்கிறார்களா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஏனெனில் டைரிகள் மற்றும் கடிதங்களில் சொர்க்கத்திற்கு எப்படி செல்வது போன்று குறிப்பிட்டிருந்ததால், மூடநம்பிக்கை காரணமாக செய்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகமடைந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் சாமியார்களின் தலையீடு இல்லை என்று பொலிசார் கூறியுள்ளனர். பொலிசார் இறந்தவர்களின் உறவினர்கள் 20 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் அது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. இறந்த 11 பேர் விவகாரத்தில் shared psychosis என்ற நோயின் தாக்கம் இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

shared psychosis என்றால் ஒருவர் மூடநம்பிக்கையோ அல்லது வேறு ஏதேனும் பற்றி மற்றொருவரிடம் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கும் போது அவர்களும் அதற்கு அடிமையாகிவிடுவார்களாம்.

இதனால் இந்த 11 பேர் மரணம் விவகாரத்தில் யாரேனும் மூடநம்பிக்கை மிகுந்தவர் இருந்தாரா அல்லது தற்கொலைப் பற்றி தொடர்ந்து கூறிக் கொண்டே மற்றவர்களை மாற்றினாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் சம்பவத்தில் இறந்தவர்களை கடைசியாக அதாவது அவர்கள் இறப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பு டெலிவரி பையன் 20 ரொட்டிகளை டெலிவரி செய்துள்ளான்.

அவனே இறந்தவர்களை கடைசியில் பார்த்துள்ளான் என்பதால் அவனிடமும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.