தன்னை வளர்த்த முதியவர் மற்றும் தன்னுடன் இருந்த மாடு உயிருக்கு போராடிய நிலையில் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மின்வயரை கடித்து இழுத்து நாயும் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள கல்கொண்டான்பட்டியில் நேற்று மாலை பெய்த மழையின் காரணமாக அங்குள்ள மின் வயர் ஒன்று அறுந்து கிடந்துள்ளளது.
இன்று காலை அவ்வழியாக சென்ற கல்கொண்டான்பட்டியைச் சேர்ந்த மொக்குசு என்ற முதியவரும் அவர் வளர்த்த நாய்யுடனும் தனது தோட்டத்தில் மாடு மேய்க்க சென்றுள்ளனர்.
இந்நிலையில் அறுந்து கிடந்த மின்வயரை மாடு மிதித்ததாக் மின்சாரம் பாய்ந்து துடித்தது. இதனை கண்ட முதியவர் மாட்டை காப்பாற்ற முயன்ற போதும் அவர் மீதும் மின்சாரம் தாக்கியது.
இதனையறிந்த முதியவரின் வளர்ப்பு நாய் அவர்களை காப்பாற்ற முயல்வதாக மின்வயரை கடித்து இழுத்த நிலையில் நாயின் மீதும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக மூவரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்ப இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.
உத்தப்பநாயக்கனூர் பொலிசார் வழக்குப் பதிவு செய்து உடல்களை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தை உசிலம்பட்டி கோட்டாச்சியர் முருகேசன், உசிலம்பட்டி காவல்துணைக் கண்காணிப்பாளர் கல்யாணக்குமார் நேரில் விசாரனை நடத்தி இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரணமாக 1 லட்சம் நிதி வழங்கப்படும் என உசிலம்பட்டி கோட்டாச்சியர் உறுதியளித்தார்.