வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனும் இயந்திரவியல் பொறியியளாலருமான கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற இளைஞனே உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டு மின்சார பொருளான பிளக் ‘பொய்ன்ற்’ (‘நீள் மின் இணைப்பு பொருத்தி’)(Power Strip) தயாரிப்பில் உலகில் அதிக நீளமான ‘மின் இணைப்பு பொருத்தி’ (Power Strip) தயாரித்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார் .
மேற்படி சாதனை முயற்சி வவுனியா தமிழ் மத்திய கல்லூரி மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் (28.02.2018) அன்று இடம்பெற்றிருந்தது .
அந்த வகையில் 2.914 மீற்றர் நீளமும், 0.074 மீற்றர் அகலமும், 0.050 மீற்றர் உயரமும் கொண்ட நீள் மின் இணைப்பு பொருத்தியை க. கணேஸ்வரன் தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்
இவ்விளைஞனின் உலக சாதனை முயற்சியை நில அளவை திணைக்களத்தினை சேர்ந்த அரச நில அளவையாளர் பி.நிமலன் மற்றும் மின் பொறியிலாளர் கெ.ராஜ்குமார் ஆகியோர் பார்வையிட்டு பரிசோதித்ததுடன் க.கணேஸ்வரனின் உலக சாதனை முயற்சி சம்பந்தமான அறிக்கையை கின்னஸ் சாதனை சான்றிதழுக்காக அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
மேற்படி கின்னஸ் உலகசாதனை தொடர்பாக கனகேஸ்வரன் கணேஸ்வரன் தன்னுடைய சமூக வலைதளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார் .
இந்த கின்னஸ் உலக சாதனையானது
இலங்கையின் தனி ஒருவரால் நிகழ்த்தப்பட்ட தொழில்நுட்பரீதியான முதலாவது கின்னஸ் சாதனையாகவும்
வட மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட தொழில்நுட்பரீதியான முதலாவது கின்னஸ் சாதனையாகவும்
வவுனியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட முதலாவது கின்னஸ் சாதனையாகவும் மற்றும்
#வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நிகழ்த்தப்பட்ட முதல் கின்னஸ் சாதனையாகவும் நிகழ்த்திக்காட்டியதில் தமிழனாக பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
கின்னஸ் உலகசாதனையாளனான வவுனியாவை சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் அவர்களை வவுனியா நெற் நிர்வாகவும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கின்றது .
வவுனியாவில் இளைஞர் ஒருவர் உலக சாதனை முயற்சியில்!!(வீடியோ)