யாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த இளைஞர்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் நேற்று இரவு இடம்பெற்றுள்ளன. இதில் யாழ். கொக்குவில் மேற்கு பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதில் 24 வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குப்பிளான் தெற்கு பகுதியிலும் நேற்று இரவு வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் இதில் 15 வயது பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இவர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.