பொல்கொல்ல திறந்த பல்கலைக்கழகத்தில் எஸ்.எம்.எஸ் ஒன்றினால் மாணவ குழுக்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பல்கலைக்கழத்தின் பொறியியல் பிரிவின் இரண்டாம் வருட மாணவர்கள் குழுக்கள் இரண்டே இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.எம்.எஸ் ஒன்றினால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக கட்டுகஸ்தொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சக மாணவ, மாணவியருக்கு இரண்டாம் ஆண்டு மாணவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ் பதிவில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது விவாதமாக மாறி இறுதியில் வன்முறையாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழத்தின் பாதுகாப்பு பிரிவினரால் இந்த மோதலில் தலையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் பொலிஸ் அதிகாரிகளின் தலையீட்டில் மோதல் அமைதியாகியுள்ளதுடன், மாணவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பதிவுப் புத்தகத்தில் கையொப்பமிட்ட பின்னர் இரு குழுக்களும் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
பல்கலைக்கழகத்திற்கு இழிவுபடுத்தும் இவ்வகையான விடயங்களில் மீண்டும் ஈடுபடமாட்டோம் என மாணவர்கள் உத்தரவாதத்தை வழங்கிய பின்னரே விடுவிக்கப்பட்டுள்ளனர்.