கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள கிராமத்து பாடசாலையான இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலையின் மாணவர்கள் தேசிய மட்ட பளுத் தூக்குதல் போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.
கடந்த வாரம் தேசிய மட்ட பளுத் தூக்குதல் போட்டி திருகோணமலையில் இடம்பெற்றது. இதல் நாடளாவிய ரீதியிலிருந்து பல பாடசாலைகள் பங்குபற்றியிருந்தன.
இந்தப் போட்டியில் கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.
கலந்து கொண்டவர்களில் இருபது வயது பெண்கள் பிரிவில் 63 கிலோ பிரிவில் றஜீபா புவனரஞ்சன் வெண்கலப் பதகத்தையும், பதினேழு வயது பெண்கள் 75 கிலோ பிரிவில் துர்க்கா சுரேந்திரன் வெண்கலப் பதகத்தையும், 17 வயது ஆண்கள் 50 கிலோ பிரிவில் மோகனதாஸ் பாவலன் நான்காம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை, பல்வேறு வசதிவாய்ப்புகள் அற்ற நிலையில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் பாடசாலையிலிருந்து சென்ற தங்களின் பிள்ளைகளை சாதனையாளர்களாக மாற்றிய அதிபர், ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.